தேவகோட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை மாலையில் தேவகோட்டை ராம் நகர் பேருந்து நிலையத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலியாக கைகோர்த்து பேரணியாக சார் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தேவகோட்டை வட்டாரத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எட்டயபுரம் பகுதியில் காலூன்ற முயலும் பட்டாசு ஆலைகள்! அச்சத்தில் கிராம மக்கள்

காரைக்குறிச்சியில் கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு

ஒசூா் அருகே பட்டியலின மக்களின் பொதுப் பாதையை மறித்து முள்வேலி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மனவளக் கலை பயிற்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


