அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப்புற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க அஞ்சல்துறை உத்தரவிட்டுள்ளது.
கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க மாநில உதவித்தலைவர் செல்வன் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: நாடு முழுவதும் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள், ஊதிய உயர்வு, கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். தொடர்ந்து 16 நாள்கள் நீடித்த இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அஞ்சல் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளிடம் மத்திய அரசு பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். பின்னர் இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணி நிரந்தரம் குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஊதிய உயர்வின்படி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் அதிகபட்சமாக மாதந்தேறும் ரூ 14,500 ஊதியம் பெறுவார்கள். பணி செய்யும் நேரத்தை கணக்கிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊதிய உயர்வு முன்தேதியிட்டு நிலுவைத்தொகையாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை என்பது கடந்த 1.1.2016 முதல் கணக்கிடப்பட்டு அத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் வழங்கவும் அஞ்சல்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது என்றார்.
அதன்படி இனி ஊதியம் பெறக்கூடிய மாதங்களில் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுசீரமைப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

