முனியப்ப சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேக


சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேக விழாவும், திங்கள்கிழமை கிடா வெட்டு படையல் வழிபாடும் நடைபெற்றது.
இக் கோயிலில் 48 நாள்களுக்கு முன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில், கலசங்களில் நீர் நிரப்பி யாகம் வளர்க்கப்பட்டது. அதன்பின்னர், பூர்ணாஹூதி முடிந்து சூலாயுத வடிவிலான முனியப்ப சுவாமிக்கு கலசநீரால் அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இவ் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயிலில் கிடா வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மதியம், கோயிலில் அசைவ அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...