சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் 22 கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றக் குறிப்பாணையை நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்து, உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார். இதில், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய வட்டங்களில் பணியாற்றும் 22 கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றக் குறிப்பாணையை (70-ஏ,பி) நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், மாநிலப் பொதுச் செயலர் கா. செல்வன் கண்டன உரையாற்றினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் பாண்டியன், மாநில அமைப்புச் செயலர் மகேந்திரன், மாநிலப் பொருளாளர் ராஜ்குமார் உள்பட சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் வந்திருந்து கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

