திருப்புவனத்தில் நாஞ்சல் சம்பத் பிரசாரம்
By DIN | Published On : 11th April 2019 07:20 AM | Last Updated : 11th April 2019 07:20 AM | அ+அ அ- |

திருப்புவனத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை இரவு திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார்.
திருப்புவனத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். திமுக எம்எல்ஏவும் மாவட்டச் செயலருமான கே.ஆர்.பெரியகருப்பன், ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி, கடம்பசாமி, மதிமுக ஒன்றியச் செயலாளர் சேகர் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூட்டத்தில் கலந்து கொண்டு, சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டிப் பேசினார். அப்போது அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் அந்த அரசுக்கு பல்லக்கு தூக்குகிற அதிமுக அரசையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதற்கு வரும் தேர்தலில் வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.