காலமானார்: துணைமாலை அம்மாள்
By DIN | Published On : 12th February 2019 07:09 AM | Last Updated : 12th February 2019 07:09 AM | அ+அ அ- |

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சிவகங்கை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான வே.ராஜசேகரனின் தாயார் வே. துணைமாலை அம்மாள் (98) உடல்நலக் குறைவு காரணமாக சிவகங்கையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 11) காலமானார்.
இவரது இறுதிச்சடங்கு சிவகங்கை செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 12) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 63794 99399.