சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 12th February 2019 07:00 AM | Last Updated : 12th February 2019 07:00 AM | அ+அ அ- |

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை, போக்குவரத்துறை, காரைக்குடி அரிமா சங்கம் மற்றும் சிவகங்கை மாவட்ட சாலைப் பாதுகாப்புப்படை ஆகியவற்றின் சார்பில் இவ்விழா நடத்தப்பட்டது.
இதில், விழிப்புணர்வுக் கண்காட்சியை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு அரிமா சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கண்ணப்பன் தலைமை வகித்தார். போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் ஷேக் மகபுபாஷா, சாலைப் பாதுகாப்புப் படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரகாஷ் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை -1) ஏ.கே. முருகன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர். ஆத்மநாதன் ஆகியோர் சிறப்பாக கண்காட்சி அமைத்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
காரைக்குடி காஸ் மாஸ் அரிமா சங்கத் தலைவர் சரவணக்குமார் வாழ்த்திப் பேசினார். இதில், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், காரைக்குடி அரிமா சங்கப் பொருளாளர் எம். அசோகன் நன்றி கூறினார்.