பள்ளியில் நெகிழி ஒழிப்பு உறுதிமொழி
By DIN | Published On : 04th January 2019 01:37 AM | Last Updated : 04th January 2019 01:37 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நெகிழிப்பை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஏகாம்பாள் தலைமை வகித்தார். பள்ளி நிறுவனர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில், நெகிழிப்பையினால் நிலத்தடியில் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்களை உறுதி மொழியாக எடுத்துக் கொண்டு நெகிழிப்பையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுப்போம், துணிப்பையை நம்முடனேயே வைத்திருப்போம் என்று கூறினர். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் நந்தினி நன்றி கூறினார்.