மடப்புரம் காளி கோயில் உண்டியல் திறப்பு
By DIN | Published On : 04th January 2019 01:37 AM | Last Updated : 04th January 2019 01:37 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலில் அத்துறையின் பரமக்குடி உதவி ஆணையர் ராமசாமி, மடப்புரம் உதவி ஆணையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோயில் மண்டபத்தில் பகலில் தொடங்கி இரவு வரை காணிக்கைகள் எண்ணும் பணியில் மதுரை சத்யசாய் சமிதியைச் சேர்ந்த பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கம் ரூ. 32 லட்சத்து 99 ஆயிரத்து 975, தங்கம் 255 கிராம், வெள்ளி 471கிராம் காணிக்கைகள் இருந்தன.