பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 04th January 2019 01:34 AM | Last Updated : 04th January 2019 01:34 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 3 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே மணலூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சபரிமலை சென்றார். அவரது மனைவி சியாமளா வீட்டைபூட்டி விட்டு சிலைமானில் உள்ள தனது தந்தையின் வீட்டுக்குச் சென்று விட்டார். பின்னர் வியாழக்கிழமை காலை வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த மூன்றேகால் சவரன் தங்க நகையை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. வீட்டின் மாடி வழியாக மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...