8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் நுழைவுச் சீட்டு
By DIN | Published On : 07th January 2019 05:56 AM | Last Updated : 07th January 2019 05:56 AM | அ+அ அ- |

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் வரும் திங்கள்கிழமை (ஜன. 7) பிற்பகல் முதல் தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தனித் தேர்வர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற ஜன. 21ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதையடுத்து, அந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு, வரும் ஜன.7 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.