திருக்கோஷ்டியூரில் ஹயக்ரிவர் ஹோமம்
By DIN | Published On : 07th January 2019 05:55 AM | Last Updated : 07th January 2019 05:55 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் திருக்கோஷ்டியூர் பிராமணர் சங்கக் கிளை சார்பில் 4 ஆவது ஆண்டாக திருக்கோஷ்டியூரில் ஹயக்ரிவர் ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இதில் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் கலந்து கொண்டார். இதில் பூர்ணாகுதி நடைபெற்று, மாணவ, மாணவியர்களின் பெயர்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் ஹோமத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட எழுதுபொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ராஜப்பா, மாவட்ட பொதுச் செயலாளர் கே.ஆர்.வைத்தியநாதன், பொருளாளர் கே.கோபாலகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் து. குருவாயூர்கண்ணன், மகளிர் அணி அமைப்பாளர் ராஜேஸ்வரி அனந்தநாராயணன், திருக்கோஷ்டியூர் கிளை பொறுப்பாளர் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இதில் திருக்கோஷ்டியூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.