மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 06th March 2019 07:45 AM | Last Updated : 06th March 2019 07:45 AM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலந்தைகுளம், பீசர்பட்டிணம் கிராமங்களில் மயானத்துக்கு செல்லும் பாதையில் மின்விளக்கு வசதி, கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். இக்கிராம கண்மாய்களை வைகை ஆற்றுடன் இணைக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். சின்னக்கருப்பன், பொன்னடியான், பெரியகருப்பன், அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், ஜெயராமன், வீரையா, காசிமுனியாண்டி உள்ளிட்டோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.