காரைக்குடி நகராட்சி பழைய சந்தைப் பேட்டைப்பகுதி மின் மயானத்தில் வரும் மார்ச் 25- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அதன் செயல்பாடுகள் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி நவீன எரிவாயு தகன மேடை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணப்பன், செயலர் சாமி. திராவிடமணி ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்த மயானத்தில் இயங்கிவரும் மின்சாரக் கருவிகள், மோட்டார், மின்விளக்குகள் போன்றவற்றை பழுதுநீக்கவும், புதிய உதிரிப்பாகங்களை பொருத்தவும் மற்றும் பராமரிப்புப் பணிகளும் நடைபெறவிருப்பதால் தற்காலிகமாக வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) வரை 5 நாள்களுக்கு செயல்பாடு நிறுத்தம் செய்யப்படும். சனிக்கிழமை (மார்ச் 30) முதல் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.