சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்
By DIN | Published On : 22nd March 2019 07:30 AM | Last Updated : 22nd March 2019 07:30 AM | அ+அ அ- |

சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்
பெயர் : ஹெச்.ராஜா
வயது : 62
கல்வி தகுதி : பி.காம்.,பி.எல்.,எப்.சி.ஏ.,
தந்தை : பேராசிரியர் எஸ்.ஹரிஹரன்,
தாய் : காமாட்சி அம்மாள்,
தொழில் : ஆடிட்டர்
பிறந்த ஊர் : தஞ்சை மாவட்டம், மெலட்டூர்.
தற்போது வசிப்பது : காரைக்குடி
மனைவி : லலிதா ராஜா, இரண்டு மகள்கள்
அரசியல் அனுபவம் : 1964- லிருந்து 1990 வரை ஆர்எஸ்எஸில் நிர்வாகியாக இருந்துள்ளார். 1991 முதல் 1993 வரை பாஜகவின் சிவகங்கை மாவட்டத் தலைவர்,1993 முதல் 1995 வரை பாஜவின் மாநிலச் செயலர்,1995 முதல் 2006 வரை பாஜகவின் மாநிலப் பொதுச் செயலர், 2006 முதல் 2014 வரை மாநிலத் துணைத் தலைவர், 2014 முதல் தற்போது வரை தேசியச் செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்து வரும் அவர் கேரள பொறுப்பாளராகவும் உள்ளார். இதுதவிர காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினராகவும் (2001-2006) இருந்துள்ளார்.
கடந்த 1999, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...