கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 28th March 2019 08:23 AM | Last Updated : 28th March 2019 08:23 AM | அ+அ அ- |

தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு காப்புக் கட்டப்பட்டது. கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கொடிமரத்திற்கு பலவகை வாசனைத் திரவியங்கள், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினர். இதில் கோயில் செயல்அலுவலர் பிரதீபா, அறங்காவலர்குழுத் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...