சிவகங்கை மக்களவைத் தொகுதி: பாஜக,காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து விவரம்
By DIN | Published On : 28th March 2019 08:22 AM | Last Updated : 28th March 2019 08:22 AM | அ+அ அ- |

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவின் சொத்து மதிப்பு 85 லட்சத்து 83 ஆயிரத்து 389 என உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.அப்போது, அவர் வேட்பு மனுவுடன் தனது சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் சம்பந்தமான உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அதில், அசையும் சொத்துகளாக அவரது பெயரில் ரூ.50,97,540 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.19,12,417 மதிப்பிலும், கூட்டு குடும்ப சொத்தாக ரூ.15,73,432 மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.85,83,389 மதிப்பிலான அசையும் சொத்துகளாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,அசையாச் சொத்துக்களாக அவரது பெயரில் ரூ.77,90,000 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.94,00,000 மதிப்பிலும், கூட்டு குடும்பச் சொத்தாக ரூ.4,00,000 மதிப்பில் உள்ளதாகவும், வங்கி இருப்பாக அவரது பெயரில் ரூ.75 000, அவரது மனைவி பெயரில் ரூ.50,000 இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதவிர சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் அளித்த உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்: இதேபோன்று, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் திங்கள்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் தனது சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் சம்பந்தமான உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அதில் அசையும் சொத்துகளாக ரூ.24,13,73,168 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.9,37,99,140 மதிப்பிலும், அசையாச் சொத்துகளாக அவரது பெயரில் ரூ.22,88,89,303, அவரது மனைவி பெயரில் ரூ.22,96,67,413 மதிப்பிலும், கையிருப்பு ரொக்கம் அவரது பெயரில் ரூ.3,54,619, அவரது மனைவி பெயரில் ரூ.3,31, 106 என மொத்தம் ரூ.79 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 749 மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ-இல் 2 வழக்குகளும், அமலாக்கத் துறையில் 2 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...