தண்டவாளத்தின் குறுக்கே பைக் ரயில் நடுவழியில் நிறுத்தம்
By DIN | Published On : 19th May 2019 04:20 AM | Last Updated : 19th May 2019 04:20 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே இரு சக்கர வாகனம் நின்றதால் பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திருப்புவனம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. ரயில் ஓட்டுநர் உடனடியாக இதை கவனித்துவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சற்று முன்னதாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது, இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகே யாரையும் காணவில்லை. பின்னர், அந்த இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தை அகற்றிய பின்னர், ரயில் அங்கிருந்து அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.