மானாமதுரையில் கார் மோதி காவலாளி பலி
By DIN | Published On : 19th May 2019 04:17 AM | Last Updated : 19th May 2019 04:17 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சனிக்கிழமை கார் மோதி காவலாளி உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே கேப்பர்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60). இவர் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மரக்கடையில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதிகாலையில் பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் தேநீர் குடித்து விட்டு, வேலை பார்க்கும் கடைக்குச் செல்வதற்காக, செல்வராஜ் சாலையை கடந்துள்ளார். அப்போது, மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற கார் மோதியதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநரான, நாமக்கல் மாவட்டம், கல்குறிச்சி வெள்ளாளபட்டி கிராமத்தைச் சேர்ந்த காந்தியை கைது செய்தனர்.