வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 19th May 2019 04:19 AM | Last Updated : 19th May 2019 04:19 AM | அ+அ அ- |

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. விஷேச அலங்காரத்துக்கு பின் தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.
இதேபோன்று,கோவானூர், திருப்புவனம், மதகுபட்டி, பூவந்தி, திருப்பாச்சேத்தி, காளையார்கோவில், சருகனி,சிங்கம்புணரி, மறவமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
தேவகோட்டை: தேவகோட்டை மலைக்கோயிலில் வைகாசி விசாக விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு காலையில் மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.