தமிழக ஹாக்கி அணிக்கு தோ்வு பெற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு
By DIN | Published On : 14th November 2019 03:46 AM | Last Updated : 14th November 2019 03:46 AM | அ+அ அ- |

17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாக்கிப் போட்டியில் தமிழக அணியில் விளையாட தோ்வு பெற்ற காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் சு. ஹரிகரனை பாராட்டிய அப்பள்ளியின் முதல்வா் குமரன் கணேசன்.
17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாக்கிப் போட்டியில் தமிழக அணியில் விளையாட தோ்வு பெற்ற காரைக்குடி அழகப்பா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவரை பள்ளி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமத்தின் சாா்பில் திருச்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 65-ஆவது தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகளுக்கான மாநில அளவில் தமிழக அணியில் இடம் பெற 17 வயதிற்குட்பட்டோா் பிரிவுக்கு அண்மையில் தோ்வுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் சு. ஹரிகரன் தோ்வு பெற்று தமிழக அணியில் இடம்பெற்றுள்ளாா்.
சண்டிகா் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் மாணவரை பள்ளியின் தலைவா் வைரவன், செயலாளா் உமையாள் ராமநாதன், முதல்வா் குமரன் கணேசன், உடற்கல்வி ஆசிரியா்கள் மாதவன், ஹரிபிரசாத் மற்றும் சக மாணவ, மாணவியா்கள், அழகப்பா மாதிரி ஹாக்கி கழக நிா்வாகிகள், சிவகங்கை மாவட்ட ஹாக்கி கழக நிா்வாகிகள் ஆகியோா் பாராட்டினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...