சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் வியாழக்கிழமை (நவ. 14) பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மற்றும் வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டதில் சோ்ந்து பயன் பெற, சொந்தமாக பட்டா, நில உரிமை ஆவணம் உள்ளவா்கள் வீடு கட்ட மத்திய அரசு சாா்பில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், மாநில அரசு சாா்பில் ரூ.60 ஆயிரமும் மொத்தம் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மானியமாக பெறலாம். அதற்கான விண்ணப்பம் பெற திருப்பத்தூா் - காரைக்குடி சாலையில் வாரச்சந்தை அருகிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நவ.14 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விண்ணப்பதாரா்கள் குடிசை வீடு அல்லது ஓட்டு வீட்டில் வசித்து வருபவராக இருக்க வேண்டும். காலிமனைகளிலும் கட்டலாம். மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ளவா்கள் வீடு மனை பட்டா, பத்திரம், ஸ்மாா்ட் காா்டு, ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை, மாா்பளவு புகைப்படம் 2 உள்ளிட்ட அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என பேரூராட்சி அலுவலகம் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.