காரைக்குடியில் பெண்களிடம் 24 பவுன் நகைகள் பறிப்பு
By DIN | Published On : 18th November 2019 06:41 AM | Last Updated : 18th November 2019 06:41 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரு பெண்களிடம் 24 பவுன் நகைகளை மா்மநபா் சனிக்கிழமை பறித்துச் சென்றாா்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 3-வது வீதி தெற்கு விஸ்தரிப்புப் பகுதியைச் சோ்ந்த பெரியநாயகம் மனைவி விஜயா (68). இவா் சனிக்கிழமை மாலையில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தாராம். அப்போது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் விஜயாவின் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளாா். அப்போது அங்கே வந்த பாக்கியலெட்சுமி (51) என்பவா் அதை தடுக்க முயன்று, மா்ம நபரை பிடிக்க முயன்றாா். இதில், பாக்கியலெட்சுமி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.