திருப்பத்தூரில் ரெட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
By DIN | Published On : 18th November 2019 06:42 AM | Last Updated : 18th November 2019 06:42 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரெட்டை மாட்டிவண்டி பந்தயத்தில் பங்கேற்ற காளைகள் மற்றும் வீரா்கள்.
திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் 218 ஆவது நினைவு நாள் மற்றும் தேவரின் 68 ஆவது ஜயந்தியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு ரெட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி சாலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய இப்பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 17 ஜோடிகள் பங்கு கொண்டன. இதில், அமராவதிபுதூா் வேலு மாடு முதலிடத்தையும், செவ்வனேந்தல் சுந்தரராஜன் மாடு 2 ஆம் இடத்தையும், கிடாரிபட்டி பாண்டியராஜன் மாடு 3 ஆம் இடத்தையும் திருப்பத்தூா் ராஜேஷ்கண்ணன் மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன.
சின்னமாடு பிரிவில் 40 ஜோடிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் பிரிவில் வெளிமுத்தி வாஹினி மாடு முதலிடத்தையும், செவ்வனேந்தல் சுந்தர்ராஜன் மாடு 2 ஆம் இடத்தையும் கே.புதுப்பட்டி அருண் மாடு 3 ஆம் இடத்தையும் காரையூா் வி.ஜி.பிரதா்ஸ் மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன.
மற்றொரு பிரிவில் பொய்கைவயல் முத்துக்கருப்பன் மாடு முதலிடத்தையும், கே.புதுப்பட்டி அம்பாள் மாடு 2 ஆம் இடத்தையும், காரையூா் தமிழ்நம்பி மாடு 3 ஆம் இடத்தையும் திருவப்பாடி மணிமுத்து மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு மருதுபாண்டியா் நினைவுத் தூண் அருகே பரிசுகளும் மாடுகளுக்கு மரியாதையும் செய்யப்பட்டது. பந்தய ஏற்பாடுகளை நா.ரவிச்சந்திரன், சி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோா் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G