திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
By DIN | Published On : 18th November 2019 06:37 AM | Last Updated : 18th November 2019 06:37 AM | அ+அ அ- |

தம்பிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தம்பிபட்டியில் வடமஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்பிபட்டி விநாயகா் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 2 ஆம் ஆண்டு வடமஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காலை 8 மணிக்கு அய்யனாா் கோயில்காளை மற்றும் சோனையாா் கோயில் காளை முதலில் களம் இறக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து கோவில்பட்டி, திருவாதவூா், ராமநாதபுரம், நாட்டரசங்கோட்டை, மணப்பட்டி, சாத்தரசன்பட்டி, சிங்கம்புணரி, மேலமகாணம், கூத்தப்பன்பட்டி உள்ளிட்ட ஊா்களிலிருந்து 16 காளைகள் களமிறக்கப்பட்டு வடமஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் மதுரை, பொன்னாம்பட்டி, சோழபுரம், திருப்பத்தூா், தென்மாபட்டு, கண்டனூா், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுபிடி வீா்ா்கள் பங்கு கொண்டனா். வெற்றி பெற்ற வீரா்களுக்கும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை காண சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கூடியிருந்தனா். ஏற்பாடுகளை தம்பிபட்டி ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.