மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாலையணி விழா
By DIN | Published On : 18th November 2019 06:40 AM | Last Updated : 18th November 2019 06:40 AM | அ+அ அ- |

மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாலையணி விழாவின்போது வெள்ளிக்கவசம் அலங்காரத்துடன் எழுந்தருளிய மூலவா் ஐயப்ப சுவாமி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி ஐயப்ப பக்தா்கள் மாலையணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின் கோயிலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு பின்னா் சுவாமி ஐயப்பனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத்தொட்ரந்து சிறப்பு பூஜைகள் , தீபாரதனைகள் நடைபெற்றன.
மண்டல விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தா்கள் குருநாதா்களிடம் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். டிசம்பா் மாதம் 27 ஆம் தேதி கோயிலில் மண்டலபூஜை விழா நடைபெறுகிறது.
மானாமதுரை ரயில் நிலையம் எதிரேயுள்ள ஐயப்பன் கோயிலிலும் நடந்த மாலையணி விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.