மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளுக்கான செயல் ஒருங்கிணைப்பு பயிற்சி
By DIN | Published On : 11th September 2019 08:05 AM | Last Updated : 11th September 2019 08:05 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சுயஉதவிக் குழு கூட்டமைப்புக்களுக்கான செயல் ஒருங்கிணைப்பு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் கே. பர்னபாஸ் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில், பயிற்றுநர்களாக பன்னீர்செல்வம், பிச்சைமணி ஆகியோர் பயிற்சியளித்தனர். நலிவடைந்த பிரிவினரை உள்ளூர் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்துவது, ஏழை எளிய மக்களின் உரிமைகளை கேட்டுப் பெறுவது, உள்ளூர் சுயாட்சி முறை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இப்பயிற்சி குறித்த கையேடும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, துணை வட்டர வளர்ச்சி அலுவலர் (பொது) சத்ரியன் வரவேற்றார்.