இளையான்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 29th September 2019 05:22 AM | Last Updated : 29th September 2019 05:22 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரரம் கைது செய்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மலைச்சாமி, நாகராஜன், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அல்அமீன், அம்பலம் ராவுத்தர் நெயினார், திமுக ஒன்றியச் செயலாளர் மதியரசன், நகரச் செயலாளர் நஜூமுதீன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜேம்ஸ் வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.