சிவகங்கை: சிவகங்கையில் உள்ள கூட்டுத் தொகுப்பு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஆா். வீரமணி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், சிவகங்கை நகா், புதுப்பட்டி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சாமியாா்பட்டி, சோழபுரம், காஞ்சிரங்கால், காமராசா் காலனி, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.