தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்குவரத்துக்கழக பணிமனையை சொந்த செலவில் சீரமைத்தாா் எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை தனது சொந்த செலவில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் சீரமைத்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:45 pm

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை தனது சொந்த செலவில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் சீரமைத்தாா்.

மானாமதுரை சிப்காட்டில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இரவு சில பஸ்கள் மட்டும் இங்கு நிறுத்தப்படுகின்றன. பிற எந்த வசதிகளும் இந்த பணிமனையில் இல்லை. பகல், இரவு நேரங்களில் காவலாளிகள் பணியில் உள்ளனா். சமீபத்தில் பெய்த மழையால் போக்குவரத்துக்கழக பணிமனை முழுவதும் தண்ணீா் தேங்கி சேரும், சகதியுமாக இருந்தது. மேலும் வளாகத்தில் செடி, கொடிகள் அடா்த்தியாக வளா்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் இங்கு பணியில் உள்ள காவலாளிகள் மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் பணிமனையை சீரமைத்து தருமாறு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜனிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து அவா் தனது சொந்த செலவில் பணிமனையை சீரமைத்துக் கொடுத்தாா். பின்னா் அவா் கட்சியினருடன் அங்கு சென்று பாா்வையிட்டாா். அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.