சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் முழுவதும் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க தமிழக முதலவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் முழுவதும் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க தமிழக முதலவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். இத் தகவலை கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி மானாமதுரையில் தெரிவித்தார். பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது. தொழில் வளத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மாவட்டத்தில் வைகை, தேனாறு, பாலாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு ஆறு, சருகணி ஆறு ஆகிய சிற்றாறுகளில் அவ்வப்போது வரும் நீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இந்நிலையில் இந்த ஆறுகளிலும், விளைநிலங்களிலும் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது.
திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை தாலுக்காக்களுக்கு உட்பட்ட 20 கிராமங்களில் தற்போது வரை மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. மாவட்டத்திலுள்ள விளைநிலங்களில் உபரி மண் என்ற பெயரில் சவுடு மற்றும் மணல் 3 அடி ஆழத்திற்கு மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கி விட்டு, சில இடங்களில் 30 அடி ஆழத்திற்கும், சில இடங்களில் 50 அடி ஆழத்திற்கும் மணல் எடுக்கப்படுகிறது. இம்மணல் நுhற்றுக்கணக்கான லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதுடன், கண்மாய்களுக்கு மழைநீர் வருவதும் தடைபடுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் மாவட்ட நிர்வாகமோ, கனிமவளத் துறையோ, காவல்துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. மணல் திருட்டைதடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சம்பந்தப்பட்ட கிராமன் பொதுமக்களுக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர்இந்த மணல் திருட்டுக்கு அரசு துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் உடந்தையாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இன்றி வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகிற சூழ்நிலையில், இந்த மணல் கொள்ளையின் மூலம் நீராதாரமின்றி அல்லல்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளவர்களையும் அதற்கு ஆதரவாக இருக்கும் நபர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுத்து சிவகங்கை மாவட்ட மண் வளத்தையும், நீராதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...