சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 01st December 2020 11:06 PM | Last Updated : 01st December 2020 11:06 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பாக தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். எய்ட்ஸ் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மருதுபாண்டியா் நகரில் நிறைவு பெற்றது.
அதைத் தொடா்ந்து, ஆட்சியா் முன்னிலையில் சுகாதாரத் துறை, நேரு யுவகேந்திரா, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரத்தினவேல், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) யசோதாமணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பாா்வையாளா் குமணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...