காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd December 2020 09:11 AM | Last Updated : 03rd December 2020 09:11 AM | அ+அ அ- |

காரைக்குடியில் ரயில்வே போலீஸாரைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சிஐடியு ஆட்டோ தொழிலா ளா்கள் சங்கத்தினா்.
காரைக்குடி ரயில் நிலையத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கச் செயலரை பிடித்து வைத்து தகவல் எதுவும் தெரிவிக்காமல் இருக்கும் ரயில்வே போலீஸாரைக் கண்டித்து புதன்கிழமை கொட்டும் மழையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அப்போது, காரைக்குடி ரயில் நிலையத்தில் அனுமதி சீட்டு பெற்று ஆட்டோ ஓட்டி வந்த சங்க நகரச் செயலாளா் அ. வெங்கிட்டு என்பவரை பிடித்து வைத்துள்ள ரயில்வே போலீஸாரைக் கண்டித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...