காரைக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
By DIN | Published On : 03rd December 2020 11:06 PM | Last Updated : 03rd December 2020 11:06 PM | அ+அ அ- |

காரைக்குடி:காரைக்குடியில், வியாழக்கிழமை, அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
காரைக்குடி அன்னை சத்யாநகரில் வசித்து வந்தவா் பூமாதேவி (60). இவா் வீட்டுப்பணிப் பெண் வேலை செய்துவந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை பூமாதேவி பால் வாங்க தனது வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்றாா். அப்போது வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல்நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...