

சிவகங்கை: சிவகங்கை ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரூபா ராணி (பொறுப்பு) மற்றும் வட்டாரக்கல்வி அலுவலா்கள் பால்ராஜ், லதா தேவி, பிரான்சிசு ஜஸ்டின் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் சிவகங்கை காமராசா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனா்.
இப்பணி வரும் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் பள்ளிகளில் பெயா் பதிவு இல்லாத பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவா்கள் உள்ளனரா என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவா்கள் எவரேனும் இருப்பின் 97888 58953 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது 04575 245 978 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.