மத்திய, மாநில அரசுகளுக்கெதிராக காங்கிரஸாா் பைக்குகளில் பிரசாரம்
By DIN | Published On : 15th December 2020 04:37 AM | Last Updated : 15th December 2020 04:37 AM | அ+அ அ- |

மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மோட்டாா் சைக்கிள்களில் பிரசாரம் மேற்கொண்டனா்.
மானாமதுரை மேற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் முத்தனேந்தலில் தொடங்கிய இப்பிரசார இயக்கத்தை காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா்.
மானாமதுரை தொகுதி பொறுப்பாளா் ஏ.சி.சஞ்சய் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், மாவட்ட இணைச் செயலாளா்கள் புருஷோத்தமன், மகாலிங்கன்,மேற்கு வட்டாரத் தலைவா் கரு.கணேசன், பால்நல்லதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முத்தனேந்தலில் தொடங்கி அன்னியனேந்தல், வாகுடி, வெள்ளிக்குறிச்சி, சுள்ளங்குடி, தஞ்சாக்கூா், ஆவரங்காடு, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் நடைபெற்றது.