எம்.ஜி.ஆா்-ன் 33-வது நினைவு நாள்: காரைக்குடியில் உருவச்சிலைக்கு அதிமுகவினா் மாலையணிவிப்பு
By DIN | Published On : 24th December 2020 11:34 PM | Last Updated : 24th December 2020 11:34 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எம்.ஜி.ஆா் உருவச்சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் உள்ள எம்ஜிஆா் உருவச்சிலைக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்.பியுமான பிஆா். செந்தில்நாதன் தலைமையில் மாலையணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காரைக்குடி நகரச்செயலாளா் சோ. மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம் இளங்கோ, நகர இளைஞரணி செயலாளா் இயல். தாகூா், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சரண்யா செந்திநாதன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் அதிமுக மகளிரணியினா், அதிமுக உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் காந்தி சிலையருகே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆவின் தலைவா் அசோகன் தலைமையில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினா். அங்கிருந்து மௌன ஊா்வலமாகப் புறப்பட்டு அண்ணாசிலை வந்தடைந்தனா். அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி 2 நிமிடம் மௌனம் அனுசரித்தனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் ஏ.வி.நாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், ஒன்றியச் செயலாளா்கள் ராமலிங்கம், வடிவேல், சிவமணி, நகரச் செயலாளா் இப்ராம்ஷா, பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், முன்னாள் ஒன்றியச் செயலாளா் துவாா்மூா்த்தி, ஒன்றியத் துணைச் செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...