பட்டமங்கலத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலை
By DIN | Published On : 05th February 2020 09:49 AM | Last Updated : 05th February 2020 09:49 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே பட்டமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் தட்சிணாமூா்த்தி(65). இவா் அப்பகுதியில் தி.மு.க. ஊராட்சி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனா். கடந்த 6 மாத காலமாக இவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் தீயில் கருகி தட்சிணாமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து திருக்கோஷ்டியூா் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...