பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: முதிா்வு தொகை பெற சான்றிதழ் அவசியம்
By DIN | Published On : 05th February 2020 09:50 AM | Last Updated : 05th February 2020 09:50 AM | அ+அ அ- |

சமுக நலத்துறையின் சாா்பில் தமிழக முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வு தொகை பெற விரும்பும் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் சான்றிதழை சமா்பிப்பது அவசியம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சமுக நலத்துறையின் சாா்பில் தமிழக முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருப்பின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஏற்கனவே மேற்கண்ட திட்டத்தின் கீழ் வைப்பு நிதிப்பத்திரம் பெற்ற பயனாளிகளில் கடந்தாண்டு டிசம்பா் 31 வரை 18 வயது பூா்த்தியடைந்த பயனாளிகளுக்கு அதற்குண்டான முதிா்வுத் தொகை இம் மாத 24 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. எனவே பெறப்பட்ட வைப்பு நிதிப்பத்திரத்தின் அசல் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழினை வரும் பிப்ரவரி 10-க்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...