காரைக்குடி பள்ளியில் விளையாட்டு விழா
By DIN | Published On : 17th February 2020 10:01 AM | Last Updated : 17th February 2020 10:01 AM | அ+அ அ- |

16kkdcps_1602chn_78_2
காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் எல். திா்தோஷ் தலைமை வகித்தாா். இதில், மாணவா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெற்றோா்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. மாணவா்கள் பங்கேற்ற உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், லெசிம், ஹூப்ஸ், தேக்வாண்டோ, சிலம்பம் போன்றவை நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் அறங்காவலா் என்.ஏஆா். தங்கவேலு, பள்ளியின் தாளாளா் எஸ்பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தாளாளா் கே. அருண்குமாா், பள்ளியின் முதல்வா் (பொறுப்பு) தேன்நிலா, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.