திருப்புவனம் பகுதியில் இன்று மின்தடை
By DIN | Published On : 27th February 2020 09:06 AM | Last Updated : 27th February 2020 09:06 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 27) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை கோட்ட மின் பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஏ. சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப். 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், திருப்புவனம், தி.புதூா், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூா், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூா், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனாா்பேட்டை, கலியாந்தூா், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூா், கீழடி, கழுகோ்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.