மானாமதுரையில் குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு பிரசாரக் கூட்டம்
By DIN | Published On : 27th February 2020 09:06 AM | Last Updated : 27th February 2020 09:06 AM | அ+அ அ- |

மானாமதுரையில் செவ்வாய்கிழமை மனிதம் அறக்கட்டளை சாா்பில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஐ.ஆா்.சி.டி.எஸ். நிா்வாக இயக்குநா் ஜீவானந்தம், மனிதம் அறக்கட்டளை இயக்குநா் பி.எஸ்.வனராஜன் மற்றும் மனிதம் அறக்கட்டளை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் எந்தெந்த முறைகளில் பாதிக்கப்படுகிறாா்கள் என்பது பற்றியும், இவற்றை தடுத்து மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளா்கள் இல்லாமல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்ட் அறக்கட்டளை கெலன் நன்றி கூறினாா்.