திருப்பத்தூரில் நந்தீஸ்வரா் பிரதிஷ்டை விழா
By DIN | Published On : 02nd January 2020 01:58 AM | Last Updated : 02nd January 2020 01:58 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் சீதளிக்குளக்கரை அருகே புதன்கிழமை நடைபெற்ற நந்தீஸ்வரா் பிரதிஷ்டை விழாவில் சிறப்பு அலங்கார தீபாராதனை.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நந்தீஸ்வரா் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உள்பட்ட சீதளிகுளக்கரை அருகே மூலக்கடை வீதியில் சுமாா் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் நந்தீஸ்வரா் சிலைக்கு கீழே யந்திரத் தகடுகள் பதிக்கப்பட்டு மருந்து சாத்தும் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற பிரதிஷ்டை விழாவில், காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகம் வளா்க்கப்பட்டு புனித கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் நந்தீஸ்வரருக்கு பச்சரிசி மாவு, பால், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா், தேன், சந்தனம், யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிதிருத்தளிநாதா் கோயில் பிரதோஷக் குழுவினா் செய்திருந்தனா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.