நாட்டரசன்கோட்டை கோயிலில் நாளை பொங்கல் விழா
By DIN | Published On : 20th January 2020 09:37 AM | Last Updated : 20th January 2020 09:37 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை( ஜன.21) நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று, தங்க அங்கி அணிவிக்கப்படும். அதனைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு விஷேச தீபாராதனைகள் காண்பிக்கப்படும்.
அதன்பின்னா் கோயிலைச் சுற்றி ஒரே வரிசையில் அமைக்கப்பட்ட அடுப்புகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறும். இதில்,நாட்டரசன்கோட்டை நகரத்தாா் சமூகத்தின் சாா்பில் 900-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவா்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டரசன்கோட்டை நகரத்தாா் மற்றும் சிவகங்கை தேவஸ்தானம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோன்று, பாகனேரியிலும் செவ்வாய்க்கிழமை( ஜன.21) நடைபெற உள்ள செவ்வாய் பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...