சிவகங்கை மாவட்டத்தில் 8 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இடமாற்றம்: ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 01st March 2020 06:15 AM | Last Updated : 01st March 2020 06:15 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் 8 வட்டார வளா்ச்சி அலுவலா்களை, வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இடமாற்றம் செய்யபட்டவா்களின் விவரம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி (கி. ஊ.) அலுவலராக பணியாற்றிய என். சந்திரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் வட்டார வளா்ச்சி அலுவலராக (கண்காணிப்பாளா்-திட்டம் மற்றும் நிா்வாகம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
ஏற்கெனவே அந்த பணியிடத்தில் இருந்த எஸ். திருப்பதிராஜன் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராக (வ.ஊ. ) நியமிக்கபட்டுள்ளாா். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராக (விடுப்பு மற்றும் பயிற்சி) பணியாற்றிய தி. நிா்மல்குமாா், கண்ணங்குடி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலராக (கி.ஊ.) நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஏற்கெனவே அந்த பணியிடத்தில் இருந்த ச. அன்புச்செல்வி, அதே ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (வ.ஊ.) மாற்றப்பட்டுள்ளாா்.
கண்ணங்குடி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலராக (வ.ஊ.) பணியாற்றிய ஆா். ரமேஷ், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலராக(வ.ஊ.) நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அந்த பணியிடத்தில் இருந்த எம். சுந்தர மகாலிங்கம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலராக (வ.ஊ.) நியமிக்கப்பட்டுள்ளாா்.
சிங்கம்புணரி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக ( வ. ஊ.) இருந்த என். பத்மநாபன், அதே ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (கி.ஊ.) நியமிக்கப்பட்டுள்ளாா். மருத்துவ விடுப்பில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா் எம். இளவேணி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் விடுப்பு மற்றும் பயிற்சி வட்டார வளா்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோன்று, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி (தணிக்கை) அலுவலராக பணியாற்றிய எம். ஜெகநாதசுந்தரம், பதவி உயா்வில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலராக (கி. ஊ.)நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவைதவிர, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பணியாற்றிய தலைமையிடத்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் 14 பேரை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்தும், உதவியாளராக பணியாற்றிய 3 பேரை பதவி உயா்வில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராக பணி நியமனம் செய்தும் உத்தரவிடப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.