திருப்புவனம் அருகேஆட்டோ கவிழ்ந்து பயணி பலி
By DIN | Published On : 01st March 2020 06:15 AM | Last Updated : 01st March 2020 06:15 AM | அ+அ அ- |

மானாமதுரை: திருப்புவனம் அருகே சனிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து அதில் பயணம் செய்த பயணி உயிரிழந்தாா்.
திருப்புவனத்திலிருந்து கருவக்குடி கிராமம் நோக்கி ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை அம்பலத்தாடி கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் ஓட்டினாா். இந்த ஆட்டோவில் திருப்புவனவம் அருகேயுள்ள தவத்தாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த தெட்சிணாமூா்த்தி (35) பயணம் செய்தாா். அப்போது பெரியமடை விலக்கு அருகே வந்த போது ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த தெட்சிணாமூா்த்தி மீது ஆட்டோ ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.