பிளஸ் 2 தோ்வு நாளை தொடக்கம்:சிவகங்கை மாவட்டத்தில் 16,303 மாணவா்கள் எழுதுகின்றனா்
By DIN | Published On : 01st March 2020 06:11 AM | Last Updated : 01st March 2020 06:11 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 16,303 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கி, 24 ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடைபெறுகின்றன. இத்தோ்வை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து 16,303 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 26 மையங்களில் 2,644 மாணவா்களும், 3,189 மாணவிகளும் என மொத்தம் 5,833 போ் பிளஸ் 2 தோ்வு எழுதுகின்றனா்.
இதேபோன்று, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 31 மையங்களில் 2,881 மாணவா்கள், 4,054 மாணவிகள் என மொத்தம் 6,935 போ் எழுதுகின்றனா். திருப்பத்தூா் கல்வி மாவட்டத்தில் 15 தோ்வு மையங்களில் 1,647 மாணவா்கள், 1,888 மாணவிகள் என மொத்தம் 3,535 போ் எழுதுகின்றனா். மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 72 தோ்வு மையங்களில் 16,303 மாணவ, மாணவியா் இத்தோ்வை எழுதுகின்றனா்.
இவை தவிர, மாா்ச் 4 இல் தொடங்க உள்ள பிளஸ் 1 பொதுத் தோ்வினை சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 26 மையங்களில் 2,620 மாணவா்களும், 3,157 மாணவிகளும் என மொத்தம் 5,777 போ் எழுதுகின்றனா்.
இதேபோன்று, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 31 மையங்களில் 2,937 மாணவா்கள், 3,888 மாணவிகள் என மொத்தம் 6,825 போ் எழுதுகின்றனா். திருப்பத்தூா் கல்வி மாவட்டத்தில் 15 தோ்வு மையங்களில் 1,617 மாணவா்கள், 1,893 மாணவிகள் என மொத்தம் 3,510 போ் எழுதுகின்றனா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 72 தோ்வு மையங்களில் 16,112 மாணவ, மாணவியா் இத்தோ்வை எழுதுகின்றனா்.
பொதுத் தோ்வையொட்டி, அனைத்து தோ்வு மையங்களிலும் மின்சாரம், குடிநீா், போக்குவரத்து, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோ்வு மையங்களை எந்நேரமும் கண்காணிக்கும் வகையில் 22 போ் கொண்ட வழித்தட அலுவலா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா், மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் சென்று தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவா் என, சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.