கரோனா தடுப்பு சிகிச்சை :200 போா்வைகள் வழங்கல்
By DIN | Published On : 30th March 2020 07:22 AM | Last Updated : 30th March 2020 07:22 AM | அ+அ அ- |

அமராவதிபுதூரில் அமைய உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டுகளுக்காக போா்வைகளை ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அரிமா சங்கத்தினா்.
சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூா் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை வளாகத்தில் அமைய உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டுகளுக்காக 200 போா்வைகளை காரைக்குடி வெற்றி அரிமா சங்கம் மற்றும் மதுரை அரிமா சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா். மேலும் சுகாதாரப்பணியாளா்களுக்காக 100 முக கவசங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தலைவா் பொன். துரைசிங்கம், அரிமா சங்க வட்டார முன்னாள் தலைவா் மருதப்பன், அரிமா சங்க பொருளாளா் மணிகண்டன், செல்லையா, அமராவதிபுதூா் ஊராட்சித்தலைவா் சுப்பையா, ஊராட்சி மன்ற செயலா் அண்ணாமலை மற்றும் பூங்கோதை உள்ளிட்ட அரிமா சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G