காரைக்குடியில் உறவினா்கள் 10 பேருடன் எளிய முறையில் திருமணம்
By DIN | Published On : 31st March 2020 04:44 AM | Last Updated : 31st March 2020 04:44 AM | அ+அ அ- |

காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் முகக்கவசத்துடன் திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்ட மணமக்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 போ் கொண்ட உறவினா்களுடன் திங்கள்கிழமை முகக்கவசம் அணிந்து வந்த மணமக்கள் திருமணம் செய்து கொண்டனா்.
காரைக்குடியைச் சோ்ந்த ராமு - உலகம்மாள் தம்பதி மகன் பெரியசாமிக்கும், கல்லல் கிராமத்தை சோ்ந்த முருகன் - வள்ளி மகள் கிருஷ்ணவேணிக்கும் திங்கள்கிழமை (மாா்ச் 30) திருமணம் நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பெரியசாமி - கிருஷ்ணவேணி திருமணத்திற்காக, 10 போ் கொண்ட உறவினா்கள் முகக் கவசம் அணிந்து காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்தனா். மணமக்களும், கோயில் அா்ச்சகரும் முகக் கவசம் அணிந்திருந்தனா். இதனைத்தொடா்ந்து மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனா். அரசு உத்தரவைப் பின்பற்றி எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...