திருப்புவனம், இளையான்குடியில் மறியல் செய்த திமுக வினா் கைது
By DIN | Published On : 21st November 2020 10:23 PM | Last Updated : 21st November 2020 10:23 PM | அ+அ அ- |

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மறியல் செய்த திமுக வினா் கைது செய்யப்பட்டனா்.
திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இளையான்குடியில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப.மதியரசன் தலைமையில் மறியல் செய்த திமுக வினரை போலீசாா் கைது செய்தனா். இந்த மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் அதன் சாா்பு அணி நிா்வாகிகள் சுப. அன்பரசன், முருகாணந்தம், மலைமேகு, பிரபு, சித்ராதேவி,பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதன்பின் மறியல் செய்தவா்களை போலீசாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா். திருப்புவனத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் தலைமையில் மறியல் செய்த திமுக வினா் கைது செய்யப்பட்டனா். இந்த மறியல் போராட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகா்ச் செயலாளா் நாகூா்கனி உள்பட 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். போலீசாா் இவா்களை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...